Tuesday, March 5, 2024

2024 மஹா சிவராத்திரி விழா அழைப்பு

  🙏2024 மஹா சிவராத்திரி விழா 🙏

ஶ்ரீ இராமலிங்க செளடாம்பிகை அம்மன் துணை

மஹா சிவராத்திரி மஹோற்சவ விழா அழைப்பிதழ்

அன்புடையீர், வணக்கம். நிகழும் சுபகிருது வருடம் மாசி மாதம் 25-ம் நாள் (08.03.2024)  வெள்ளிக்கிழமை இரவு மஹா சிவராத்திரி முன்னிட்டு பூளவாடி மடமனை,வரதந்து மகரிஷி கோத்திரம், கப்பேலார் வம்சம்           ஶ்ரீ இராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோவிலில் மஹா சிவராத்திரி விழா மஹோற்சவம் நடத்துவதாக பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டியிருப்பதால் நம் குல அண்ணன் தம்பிகள் அருபதும் வந்திருந்து பண்டிகையைச் சிறப்பாக நடத்தி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 ----------------------------------------------

நிகழ்ச்சி நிரல்

சுபகிருது வருடம் மாசி மாதம் 25-ம் நாள் (08.03.2024) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மேல் - தீர்த்தம் கும்பஸ்தாபனம்

மாசி மாதம் 26-ம் நாள் (09.03.2024) சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு மேல் - விநாயகர் பூஜை, இராமலிங்கர் பூஜை,கெச்சாளம்மன் பூஜை,செளடாம்பிகை அம்மன் பூஜை மற்றும் பள்ளய பூஜையும் நடைபெறும்.

மாசி மாதம் 27-ம் நாள் (10.03.2024) ஞாயிற்றுக்கிழமை  அன்று மதியம் அமாவாசை பூஜை நடைபெறும்.

------------------------

மேற்படி மஹா சிவராத்திரி விழாவிற்கு மாங்கல்ய வரி ரூ.1000/- என தீர்மானிக்கப் பட்டுள்ளது. மாங்கல்ய வரி ரூ.1000/- ஐ கோவிலில் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் மஹா சிவராத்திரி பூஜை மற்றும் அன்னதான செலவு வகைகளுக்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ தருபவர்கள் கண்டிப்பாக கோவிலில் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் கோவிலில் பெற்றுச் சென்ற உண்டியலில் நிரம்பி உள்ள காணிக்கையச் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளவும்.


        இந்த தகவல் கிடைத்தவர்கள் தங்கள் அருகில் உள்ளவர்களுக்கும் ,உலகெங்கும் பரவியுள்ளது நம் தாயாதியருக்கு தெரியப்படுத்தவும். 

அனைவரும் வந்திருந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்!!  

இங்கனம், 
ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோயில், 

சாமாஜிகள், 
பூளவாடி மடமனை கப்பேலார் அறக்கட்டளை, 
பூளவாடி. 



 

No comments:

Post a Comment