தேவல மகரிஷி
மநுவுக்கு பின் தேவர்களுக்கும் , பல கோடி ஜீவ ராசிகளும்
மானம் காக்கும் ஆடை இல்லாமல் தவித்து வந்த நிலையில் .. பிரம்மா முதலான
தேவர்களும் மற்றும் அனைத்து ஜீவராசிகளும் ஆதி சிவனிடம் சென்று மன்றாடினார்
மரவுரிகளை தரித்துக்கொண்டு.. இதை கண்ட சிவன் ஆழ்ந்த தியானத்தில் மனுவை
நினைத்து தியானித்து மீண்டும் அவரை தன இதயத்தில் இருந்து வெளிகொணர்ந்து ..
நீ அனைத்து ஜீவராசிகளுக்கும் மானம் காக்கும் கடமை உன்னுடையது என்று
வரமளித்தார். "தேவர்களின் மானம் காக்கும் நீ தேவன்கன் என்று வரும்
காலத்தில் அழைக்கப்படுவாய்" என்று அருளினார். அவ்வாரே தேவலரும் நம் சக்தி
தேவி துணை கொண்டு நாராயணனிடம் சென்று நூல்பெற்று பல துஷ்ட சக்திகளிடம் நூலை
காப்பாற்றி.. தேவலோக விஷ்வகர்மா மயனிடம் ஆடை நெய்ய உபகரணங்கள் பெற்று ஆடை
நெய்து அனைத்து ஆதி சிவன் பார்வதி சௌடேஸ்வரி முதலான தேவர்களுக்கும் ..
நாகர் . கின்னரர்கள் , கிம்புருடர்களுகும் , அனைத்து ஜீவராசிகளுக்கும்
வழங்கினார்.
தேவதத்தை :
தேவல முனிவர் அனைவர்க்கும் ஆடை வழங்கிவந்தார் அதை கண்ட சிவபெருமான் அனைவரையும் அழைத்து நமக்கு எல்லாம் ஆடை வழங்கி மானம்காத்த தேவலருக்கு மணம் முடிக்க வேண்டும் என்று கூறி சூரிய தேவனின் தங்கையான தேவதத்தை என்னும் கோடி தேஜஸ் கொண்ட பெண்ணை மணம் முடித்து முடிசூடி பூலோகத்தில் ஆமோத பட்டணம் அனுப்பிவைத்து அரசாள செய்தார்.
நாகதத்தை:
இவ்வாறு நாகலோகதினருக்கும் அழகான ஆடைகளை வழங்கியதால் அதற்க்கு கைமாறாக நகதத்தையை மணம் செய்து கொடுத்தனர்
அக்னி தத்தை :
தனக்கும் ஆடை அளித்து அலங்கரித்த மகிழ்ச்சியில் அக்னியும் தன் மகளை தேவலருக்கு மணம் செய்து கொடுத்தார்.
No comments:
Post a Comment