மடமனை

மடமனை:


 மடமனை என்பது பாரம்பரியம் , அங்கீகாரம், அந்தஸ்து, முத்திரை, பதித்த குலக்கொவில் என்று பொருள் தரும். மடமனையில் ஸ்தானிகர்கள் என்னும் பட்டம் பரம்பரையாக வகிப்பார்கள். (தொட்டுமனை ) பெரிய வீட்டுக்காரர்கள், பெரிய பூசாரி என்ற அந்தஸ்தும் உண்டு. இங்கு 60 அண்ணன் தம்பிகள் ஒன்று கூடி பெரிய சாமி கும்பிடுதல் ( தொட்டு அப்ப ) கொண்டாட அங்கீகாரம் உண்டு . மொத்தத்தில் மடமனை என்பது தலைமை அலுவலகம் என்று கூறலாம். 

கெத்திகை  மனை:


கெத்திகை மனை என்றால் கிளை அலுவலகம் என பொருள்படும். இந்த கோவில்கள் பக்தர்கள் வசதிக்காக தாங்கள் வாழும் இடங்களில் கட்டி கொண்டாடப்படுபவை. இவர்கள் மடமனைக்கு கீழே வருவார்கள். இவர்கள் பெரிய நோன்பு கொண்டாட அந்தஸ்து கிடையாது. இப்பொழுது கால மாற்றத்தால் சில விதிமுறைகள் தளர்திக்கொள்ளப்படுள்ளது.


தேவரு மனை :

பொதுவாக தேவரு மனை என்பது சாமி வீடு  எனப்பொருள் படும். பொதுவாக இருமனேரு, ஏந்தேலாரு, லத்தேகாரர், கப்பேலார் ஆகிய வம்சத்தவர்கள் புத்திர காமேஷ்டி யாகத்தின் பொழுது ஏற்பட்ட தடைகளை மீறி அசுரர்களிடம் இருந்து யாகத்தை காப்பாற்றியதால்  ஸ்ரீ சவுடேஸ்வரி யின் வாக்குப்படி இந்த நான்கு வங்குசத்தார் அல்லது குலத்தவர்கள் தங்கள் குல தெய்வமாக வீட்டில் வைத்து வழிபடலாம் எனப்படுகிறது.

இவ்வகையில் உள்ள சாமிகள் வீட்டில் பெட்டியிலோ , சுரங்கதிலோ வைக்கப்படுகிறது. திருவிழா காலங்களில் மட்டும் வெளியில் எடுத்து பண்டிகைகளுக்கு அனுப்பி விழா முடிந்த பின் மீண்டும் சீர்வரிசைகளுடன் தேவரு மனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இவ்வழக்கம் நமது பகுதியில் இல்லை சேலம் சுற்று பகுதிகளில் உள்ளது.


No comments:

Post a Comment